×

சிறுமி பலாத்காரம்: தந்தை கைது

அரூர்: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை, அவரது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில், அவரது தந்தை பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே கூறினால், தம்பியை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி, சம்பவம் குறித்து வெளியே யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில், சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதுகுறித்து சிறுமியிடம் அவரது தாய் கேட்ட போது, தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய், அரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

The post சிறுமி பலாத்காரம்: தந்தை கைது appeared first on Dinakaran.

Tags : Aroor ,Paprirettipatti ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வில் மாணவர்கள் தொடர் சாதனை