×

முருங்கைப்பூ தயிர் பச்சடி

தேவையானவை:

முருங்கைப்பூ – 1 கப்,
தயிர் – ½ கப்,
தேங்காய்துருவல் – ½ கப்,
சீரகம் – 1 ஸ்பூன்,
பச்சைமிளகாய் – 2,
உப்பு – திட்டமாக.

தாளிக்க:

எண்ணெய் – 1 ஸ்பூன்,
கடுகு – 1 ஸ்பூன்,
பெருங்காயம் – ¼ ஸ்பூன்,
கறிவேப்பிலை – 4.

செய்முறை:

முதலில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ெணய் ஊற்றி கடுகை போடவும். கடுகு வெடித்ததும், முருங்கை பூவைப் போட்டு சிறிது உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பூ வெந்ததும் அரைத்த விழுதை போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ஆறியதும் தயிர் கலந்து மீதி உப்பு சேர்த்து பரிமாறவும். முருங்கைப்பூ மருத்துவ குணங்கள்
கொண்டது.

 

The post முருங்கைப்பூ தயிர் பச்சடி appeared first on Dinakaran.

Tags : Trumpio ,Curd Tachadi ,
× RELATED சைனீஸ் காளான் சூப்