×

ஏதர் 450 எஸ் ஸ்கூட்டர்

ஏதர் எனர்ஜி நிறுவனம், 450 எஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஏதர் 450 வரிசை ஸ்கூட்டர்களின் துவக்க நிலை மாடலாக இருக்கும். ஷோரூம் விலை சுமார் ரூ.1.30 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 3 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றிருக்கும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 115 கி.மீ. தூரம் வரை செல்லலாம்.

அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ தூரம் வரை செல்லக்கூடியது. துவக்கநிலை வேரியண்ட் என்பதால் ஏதர் 450 எக்ஸ் ஸ்கூட்டர்களில் உள்ள அம்சங்களில் சில மட்டுமே இதில் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு அடுத்த மாதம் துவங்கும் எனவும், இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post ஏதர் 450 எஸ் ஸ்கூட்டர் appeared first on Dinakaran.

Tags : Aether ,Aether Energy Company ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...