×

தமிழை காவு கொடுத்து விட்டு தமிழர் பிரதமர் ஆவார் என்பதா?.. சு.வெங்கடேசன் கண்டனம்

மதுரை: தமிழை காவு கொடுத்து விட்டு தமிழர் பிரதமர் ஆவார் என்பதா? என சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழர் எதிர்காலத்தில் பிரதமராக வருவார் என்று கூறும் உள்துறை அமைச்சர் அமித் ஷா. உங்கள் அமைச்சகம் இந்தியை விதிகளை மீறி தமிழ்நாட்டில் திணிப்பதை முதலில் நிறுத்துங்கள். உங்கள் பொறுப்பில் உள்ள அலுவல் மொழி அமலாக்கம் எப்படி நடைபெறுகிறது பாருங்கள்.

அரசு நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை அலுவல் மொழி விதிகள் விதி எண் 5 ஐ 100 % அமலாக்கச் சொல்லி இந்தி பயன்பாட்டை வலியுறுத்துகிறது. ஆனால் அலுவல் மொழி விதிகள் பிரிவு 1 (II) மிகத் தெளிவாக தமிழ்நாட்டிற்கு அது பொருந்தாது என்று கூறுவதை தாண்டி 5 வது பிரிவை பேசும் கபடம் அரங்கேறுகிறது. தமிழைக் காவு கொடுத்து விட்டு தமிழர் பிரதமர் ஆவார் என்று உங்கள் ஆசை வார்த்தைகளுக்கு தமிழை நேசிக்கிற ஒரு தமிழர் கூட ஏமாற மாட்டார். முதலில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன அதிகாரிகளுக்கும், உங்கள் அலுவல் மொழி அமலாக்க குழுவிற்கும் ஒன்றை சொல்லுங்கள்.

அலுவல் மொழி விதி 1 (i) காட்டி தமிழ்நாட்டிற்குள் நுழையாதீர்கள்” என்று. தமிழ்நாட்டில் உள்ள இந்தி அமலாக்க செல்களை கலையுங்கள். தமிழரை பிரதமராக்க வேண்டும்” என்று நேற்று பேச்சு. எல்லா நடவடிக்கைகளும் இந்தியில் தான் இருக்க வேண்டும்” என்று இன்று சுற்றறிக்கை. இது தான் பாஜக. இந்த ஏமாற்று வேலை அவர்களுக்கு புதிதல்ல, எப்படி வேடம் தரித்தாலும் அவர்களை கண்டுக்கொள்வது தமிழ்நாட்டுக்கும் புதிதல்ல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழை காவு கொடுத்து விட்டு தமிழர் பிரதமர் ஆவார் என்பதா?.. சு.வெங்கடேசன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Tamil Kavu ,SV Venkatesan ,Madurai ,Tamil ,S. Venkatesan ,SV ,Venkatesan ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...