×

எண்ணூர் குடியிருப்பில் கண்காணிப்பு கேமரா: கே.பி.சங்கர் துவக்கிவைப்பு

திருவொற்றியூர்: சென்னை எண்ணூர் உலகநாதபுரம் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் திருட்டு, வழிப்பறி கொள்ளை மற்றும் பொது மக்களை பாதுகாக்கவும் உலகநாதபுரம் கிராம நல மன்றம் சார்பில் அனைத்து தெருக்களிலும் 25 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. இந்த சிசிடிவி கேமரா துவக்க விழா கிராம தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

இதில் கே.பி.சங்கர் எம்எல்ஏ பங்கேற்று சிசிடிவி கேமராவை இயக்கி துவக்கி வைத்தார். முன்னதாக மாணவ, மாணவிகளின் சிலம்பம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சியில் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ரகுநாத், கவுன்சிலர் சிவகுமார், தெய்வசிகாமணி மற்றும் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட கலந்து கொண்டனர்.

The post எண்ணூர் குடியிருப்பில் கண்காணிப்பு கேமரா: கே.பி.சங்கர் துவக்கிவைப்பு appeared first on Dinakaran.

Tags : KP Shankar ,Thiruvottiyur ,Ulaganathapuram ,Ennore, Chennai ,Ennore ,
× RELATED எண்ணூரில் மதுபோதையில் காவலரை தாக்கிய...