×

1500 பரத கலைஞர்களை கொண்டு காரைக்கால் அம்மையாருக்கு நாட்டிய சமர்ப்பண நிகழ்ச்சி

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் காரைக்கால் அம்மையாருக்கு 1500 பரத கலைஞர்களை கொண்டு நாட்டிய சமர்ப்பணம் உலக சாதனை நிகழ்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு படமாக வெளியிடப்பட்டது. இதன்பிறகு அவரது பாடலுக்கு ஒரே சமயத்தில் 1500 பரதநாட்டிய கலைஞர்கள் 30 நிமிடம் நடனம் ஆடினர். இதையடுத்து பரதநாட்டிய கலைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு அரக்கோணம், யுகாஸ் மியூசிக் அண்ட் டான்ஸ் அகாடமி நிறுவனர் கவுசல்யா வினோத்குமார் தலைமை வகித்தார். கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ பூவை எம்.ஜெகன்மூர்த்தி கலந்துகொண்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார். இதில் தமிழ்நாடு இசை பல்கலைக்கழக பரதநாட்டிய உதவி பேராசிரியர் மதன்குமார், சென்னை, நீதித்துறை நடுவர் ஏ.மாலினி, ஈக்காடு கே.முகமது ரஃபி, டாக்டர் அமுதன், தனக்கோட்டி, கூடப்பாக்கம் இ.குட்டி, முத்துராமன், செஞ்சி ஊராட்சி துணைத் தலைவர் ஜெ.ஜவகர், தொழுவூர் டி.எம்.எஸ்.கோபிநாத், குமரேசன், வழக்கறிஞர் பிரகாஷ், வினோத்குமார், ராஜ்குமார், மோகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

The post 1500 பரத கலைஞர்களை கொண்டு காரைக்கால் அம்மையாருக்கு நாட்டிய சமர்ப்பண நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thiruvallur District Ruler Plant Campus ,Karahikal Ammyar ,Karahikal Amamiyar ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்