×

எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த புத்தகத்தை படிக்க மாட்ேடன்!: 81 ஆண்டுக்கு பின் நூலகத்திற்கு திரும்பி வந்த புத்தகம்

வாஷிங்டன்:அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள அபெர்டீன் டிம்பர்லேண்ட் நூலகம் தனது பேஸ்புக் பக்கத்தில், சார்லஸ் நோர்டாஃப் மற்றும் ஜேம்ஸ் நார்மன் ஹால் எழுதிய ‘தி பவுண்டி ட்ரைலாஜி’ என்ற புத்தகத்தின் சில பக்கங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 1942ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி வெளியான இந்த புத்தகத்தை கடந்த 81 ஆண்டுகளுக்கு முன்பு நூலகத்தில் இருந்து எடுத்து சென்றவர், மீண்டும் அபெர்டீன் டிம்பர்லேண்ட் நூலகத்திற்கு திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து நூலகம் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘நூலகத்திற்கு சொந்தமான இந்தப் புத்தகம், பழைய பொருட்களுடன் கிடந்ததால் அதனை யாரோ ஒருவர் கண்டுபிடித்து எங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்தப் புத்தகத்தின் 17ம் பக்கத்தில், அந்தப் புத்தகத்தை வாங்கிச் சென்றவர் ஒரு குறிப்பை எழுதியுள்ளார். அதாவது, ‘எனக்கு எவ்வளவு பணம் கொடுத்தாலும் பரவாயில்லை, இந்த புத்தகத்தை இனிமேல் தொடர்ந்து படிக்க மாட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். பென்சிலால் அவரது குறிப்பு எழுதப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 81 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் புத்தகம் மீண்டும் எங்களுக்கு கிடைத்ததால், அந்தப் புத்தகத்தை எடுத்து சென்றவருக்கு ரூ.40,000 தாமதக் கட்டணம் வசூலிக்க ேவண்டும். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. எனவே வாசகர்கள் நூலகத்தில் இருந்து புத்தகத்தை வாங்கிச் சென்றால், உரிய நேரத்தில் செலுத்தி விடுங்கள். இவ்வாறு குப்பையில் வீசி எறிய வேண்டாம். அதேபோல் நூலக புத்தகங்கள் எங்காவது கேட்பாரற்று கிடந்தால் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்’ என்று பதிவிட்டுள்ளது.

The post எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த புத்தகத்தை படிக்க மாட்ேடன்!: 81 ஆண்டுக்கு பின் நூலகத்திற்கு திரும்பி வந்த புத்தகம் appeared first on Dinakaran.

Tags : Madden ,WASHINGTON ,Aberdeen Timberland Library ,Washington, USA ,Charles Nortoff ,James Norman Hall ,Dinakaran ,
× RELATED அதிபர் தேர்தலில் பின்னடைவா?.. டொனால்ட்...