×

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 3 பேர் கைது : உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 5 பேரை சிபிஐ விசாரணை

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் விபத்து தொடர்பாக பஹானகா பஜார் ரயில் நிலையத்தின் உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 5 பேரை சிபிஐ விசாரணைக்கு அழைத்து சென்றது. விசாரணையின் தொடர்ச்சியாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி நிலைய மேலாளர் மற்றும் சிக்னல் பொறியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில்வே ஊழியர்கள், விபத்தை நேரில் கண்ட சாட்சிகள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரிடம் சிபிஐ வாக்குமூலம் பெறும்.

The post ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 3 பேர் கைது : உதவி ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 5 பேரை சிபிஐ விசாரணை appeared first on Dinakaran.

Tags : Odisha train accident ,CBI ,Odisha ,Pahanaka Bazar train ,
× RELATED சீன விசா முறைகேடு தொடர்பாக...