×

குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்

 வெது வெதுப்பான உப்பு நீரில் சிறிது நேரம் போட்டு வைத்து, பிறகு பயன்படுத்தினால் பன்னீர் துண்டுகள் சாஃப்ட்டாக இருக்கும்.
 உளுத்தம் பருப்பு வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகி விட்டால் சிறிது பச்சரிசி மாவைத் தூவினால் சரியாகி விடும்.
 மோர்க் குழம்பு செய்து இறக்கும் போது சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.
 கீரை சமைக்கும்போது ஒரு ஸ்பூன் சீனி போட்டால் நிறம் மாறாமல் இருக்கும்.
 சப்பாத்தி செய்து முடித்தபிறகு சூடாக இருக்கும் கல்லில் பூண்டுகளை போட்டு புரட்டி எடுத்தால் ேதால் உரிக்க எளிதாக இருக்கும்.
 மட்டன் பிரியாணி செய்யும்போது, மட்டன் துண்டுகளை சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து தயிரில் அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு பிரியாணி செய்தால் வாடையும் இருக்காது. சாஃப்ட்டாகவும், டேஸ்ட்டாகவும் இருக்கும்.
– அமுதா அசோக்ராஜா, எம். ஏ. நிவேதா

ஆஹா துளசி

ரத்தம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட ஒட்டுமொத்த உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி துளசிக்கு இருக்கிறது. அனைத்து நச்சுக்களையும் சிறுநீர் மூலம் வெளியேறவும் வைத்துவிடும்.தினமும் ஏழு, எட்டு இலைகளை சாப்பிடலாம். ஒரு கப் துளசி தேநீரும் பருகலாம். துளசி இந்த செடியின் அனைத்துப்பாகங்களும் மருத்துவத்தன்மை நிறைந்தது.துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்புப்பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு ெகாடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதாரணமாக மென்று தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.

துளசிச்செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊறவைத்த நீரை தொடர்ந்து பருகிவந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது.நோய் வராமல் தடுக்கும் சக்தி மட்டுமல்லாமல், வந்தால் அதை விரைவில் குணமாக்கும் சக்தியும் துளசிக்கு உண்டு.

– கவிதா சரவணன்

The post குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள் appeared first on Dinakaran.

Tags : Kutty Toddler ,Kutty Home ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...