×

ஹவாயில் உள்ள கிலாவியா எரிமலை மீண்டும் உயிர்பெற்றது: எரிமலை அருகே வசிக்கும் மக்கள் வெளியேற அறிவுறுத்தல்

ஹவாய்: அடிக்கடி எரிகுழம்புகளை உமிழும் எரிமலைகளின் ஒன்றான பிலிப்பைன்ஸில் உள்ள மயோன் எரிமலை மீண்டும் உயிர்பெற்றுள்ளது. பிலிப்பைன்ஸில் வடகிழக்கு பிராந்தியாமான ஆல்வே மாகாணத்தில் மயோன் எரிமலை உள்ளது. அது மீண்டும் உயிர்பெற்று இரவு பகலாக வாயுக்கள் தீப்பிழம்புகளை உமிழ்ந்து வருகிறது. இதன் காரணமாக காற்றில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏரி சாம்பல்கள் கலந்துள்ளன.

வரும் நாட்களில் இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதுடன் பாறைகள் வெடித்து சிதறலாம் என்பதால் மலையின் அருகே சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு வசிக்கும் கிராமத்தினர் வெளியேற எச்சரிக்கைப்பட்டுள்ளன. அதன்படி தற்போது வரை 12,600 பேர் வீடுகளை காலி செய்து விட்டு தற்காலிக முகாம்களில் தங்கி உள்ளனர். அதுமட்டுமின்றி எரிமலை அருகே கால்நடைகளை மேய விடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எரிமலை அருகில் இருந்து கிட்டத்தட்ட 2000 பசு மாடுகள் எருமைகளை மீட்டுள்ள பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் அவற்றை ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்கின்றனர்.

இதேபோல் 3 மாத இடைவெளிக்கு பிறகு ஹவாயில் உள்ள கிலாவியா எரிமலையும் அங்கங்கே எரிகுழம்புகளை உமிழ்ந்து வருகிறது. எரிகுழம்புகள் வடிந்து வரும் கந்தக மலை பகுதியில் கரி துகள்களும் காற்றில் கலந்து காணப்படுவதால் அதன் அருகே சுமார் 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் செல்லவும், வாசிக்கவும் வேண்டாம் எனவும் எச்சரிக்கைப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் உள்ள அனக் க்ரகடவ் எரிமலையும் உயிர்பெற்று பல கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிசாம்பல்களை வெளியேற்றி வருகிறது. இதனால் காற்றில் சுமார் 2 மணி மைல் தூரத்திற்கு சாம்பல்கள் கலந்து மக்கள் சுவாச பிரச்சனைக்கு ஆளாகி உள்ளனர்.

The post ஹவாயில் உள்ள கிலாவியா எரிமலை மீண்டும் உயிர்பெற்றது: எரிமலை அருகே வசிக்கும் மக்கள் வெளியேற அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Hawaii's ,Hawaii ,Mayon Volcano ,Philippines ,northeastern ,Hawaii's Kilauea volcano ,Dinakaran ,
× RELATED ஊட்டியில் சட்ட விரோத விற்பனை அழிவின்...