×

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரம்!

சென்னை: பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில், வீட்டின் ஊழியர்கள் யாரும் திருடவில்லை என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிப்ரவரி 18ம் தேதி நகைகள் காணாமல் போனதாக, மார்ச் 30ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. 40 நாட்கள் கழித்து புகார் அளித்தது குறித்து போலீசார் சந்தேகம் அடைந்தனர். பொய் புகார் அளிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விஜய் யேசுதாஸின் குடும்பத்தாரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளார்.

The post பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரம்! appeared first on Dinakaran.

Tags : Vijay Yesudas ,Chennai ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு