×

அமெரிக்காவில் இடிந்து விழுந்த பரபரப்பான நெடுஞ்சாலை.. போக்குவரத்து துண்டிப்பு!!

வாஷிங்டன் : அமெரிக்காவில் வட கிழக்கு பிலடெல்பியா நகரில் பரபரப்பான நெடுஞ்சாலை இடிந்து விழுந்தததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதிகளவில் வாகனங்கள் வந்து செல்லக்கூடிய நெடுஞ்சாலையின் கீழே உள்ள சாலையில் வாகனம் ஒன்று தீப்பற்றிய எரிந்ததாக தெரிகிறது. அதைத் தொடர்ந்து ஒருபக்க சாலையானது திடீரென இடிந்து விழுந்தது.

அப்போது நெடுஞ்சாலையிலும் கீழேயும் யாரும் பயணிக்காததால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏற்படவில்லை. சாலை இடிந்து விழுந்த பகுதி புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது. இதையடுத்து மீட்புப் படையினர் விரைந்து வந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சாலையை சரி செய்ய சில நாட்கள் தேவைப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமெரிக்காவில் இடிந்து விழுந்த பரபரப்பான நெடுஞ்சாலை.. போக்குவரத்து துண்டிப்பு!! appeared first on Dinakaran.

Tags : America ,Washington ,North East Philadelphia ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தம்பதிக்கு சிறை தண்டனை