×

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் வணிக வளாகத்தில் நேரிட்ட தீ பெரும் விபத்தில் 7 கடைகள் எரிந்து நாசமாகின. சென்னை சவுகார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. துணை கடைகள் நிறைந்த இந்த வளாகத்தில் அதிகாலையில் ஒரு கடையில் பிடித்த தீ அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவி புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதையறிந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

5 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கு அருகில் இருந்த மின்மாற்றியே காரணம் என கூறப்படுகிறது. மின் மாற்றியில் பிடித்த தீ வணிக வளாகத்திற்குள் பரவி விட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்த பகுதி முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

 

 

The post சென்னை சவுகார்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Chennai Sawugarpet ,Chennai ,Sawugarpet ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...