×

தமிழர் பிரதமர் ஆக வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு!

சேலம்: தமிழர் பிரதமர் ஆக வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழர் பிரதமரானால் மகிழ்ச்சிதான் எனவும் மேட்டூர் அணை நீர்திறப்பில் முதல்வர் கூறியுள்ளார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை. தமிழர் பிரதமர் ஆவதை திமுக தடுத்ததாக வெளிப்படையாக சொன்னால் விளக்கம் தரப்படும் என்று கூறியுள்ளார். 9 ஆண்டு கால சாதனை குறித்து நான் கேட்ட கேள்விக்கு இதுவரை அமித்ஷா பதில் தரவில்லை எனவும் கூறியுள்ளார்.

The post தமிழர் பிரதமர் ஆக வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு! appeared first on Dinakaran.

Tags : Amitshah ,Minister ,Chief Minister ,BD. G.K. ,stalin ,Salem ,B.C. G.K. Stalin ,B.C. G.K. ,
× RELATED பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மஜத...