×

மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி 13, 14ம் தேதிகளில் குடிநீரை சேமித்து வைக்க வேண்டும்: குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்

சென்னை, ஜூன் 12: மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் வரும் நாளை (13ம் தேதி) முதல் 14ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், பொதுமக்கள் தேவையான நீரை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும், என சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மீஞ்சூரில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில், நாளை (13ம் தேதி) காலை 6 மணி முதல், 14ம் தேதி காலை 6 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக, மாதவரம், மணலி, திருவொற்றியூர், எர்ணாவூர், கத்திவாக்கம், பட்டேல் நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளுக்கு புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்படும்.

எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும். குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி 13, 14ம் தேதிகளில் குடிநீரை சேமித்து வைக்க வேண்டும்: குடிநீர் வாரியம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Meenjur seawater desalination plant ,Chennai, ,Meenjur sea water ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!