நெல்லை, ஜூன் 12: நார்சத்து மற்றும் மருத்துவ குணம் அதிகம் நிறைந்த பலாப்பழம் சீசன் தற்போது துவங்கியுள்ள நிலையில் நெல்லை மாநகர வீதிகளில் ஏராளமான பலாப்பழங்கள் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன. இவை கிலோ ரூ.25 வீதம் விற்பனை செய்யப்படுகிறது. வாழை, மா, பழா ஆகியன முக்கனிகளாகத் திகழ்கின்றன. இவற்றில் ஒன்றான பலாப்பழத்தின் பெயரை உச்சரித்தாலே நாவில் சுவை ஊறும். மலைப்பகுதிகளில் மட்டுமின்றி நல்ல மண்வளம் மிக்க பகுதிகளிலும் இந்த மரம் வளர்ந்து சீசன் நேரங்களில் கைக்கு எட்டும் தூரத்தில் வளர்ந்து பழங்களை தருகின்றன. இந்த பலாப்பழங்கள் நார்ச்சத்து அதிகம் உள்ளவையாகும்.
அத்துடன் அல்சர், செரிமான கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறுகளுக்கும் இவை தீர்வுதரும் எனக் கூறப்படுகிறது. டயட்டரி என்ற கொழுப்பு சத்து இந்தப்பழத்தில் அதிகம் இருப்பதால் குடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி குடல் புற்று நோயில் இருந்து காக்கிறது. பலாப்பழத்தை உண்ட பின்னர் அதன் கொட்டையையும் சமைத்து சாப்பிடுவோர் அதிகம். ஏ,சி, மற்றும் சில பி வைட்டமின் சத்துக்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
சிறுநீரக குழாய் புற்றுநோய், பாக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்று நோய்க்கு தினமும் 2 வேளை பலாப்பழ ஜூஸ் 5 நாட்கள் உட்ெகாண்டால் நோய் தீரும் எனக்கூறப்படுகிறது. இந்தவகை பலாப்பழங்கள் மே, ஜூன் மாதங்களில் அதிகம் விளைகின்றன. தற்போது குமரி மாவட்டம் கருங்கல், களியக்காவிளை, மார்த்தாண்டம் நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் பல்வேறு பகுதிகளில் விளைந்த வர்க்ைக மற்றும் இளம் சிகப்பு பலாப்பழங்கள் நெல்லை சாலைகளில் விற்பனைக்கு வந்து குவிந்துள்ளன.
இவை கிலோ ரூ.25 மற்றும் ரூ.30 என தரத்திற்கு ஏற்றாற்போல் எடைபோட்டு விற்கப்படுகின்றன. அத்துடன் மாநகர வீதிகளில் குவிந்துள்ள பலாப்பழங்களை வாங்க வருமாறு பொதுமக்கள் கூவி அழைத்து வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இதையடுத்து சீசன் கால கனியான இதை பலர் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். முழு பழத்தை வாங்க விரும்பாதவர்களுக்கு பாதிப்பழம் ஆக எடைபோட்டு தருகின்றனர்.
The post நெல்லை மாநகர வீதிகளில் விற்பனைக்கு குவிந்த பலாப்பழம் appeared first on Dinakaran.
