×

தமிழக அரசு வழங்கும் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு

 

அரியலூர், ஜூன் 12: தமிழக அரசு வழங்கும் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்து உள்ளார். இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள் ஆகியவற்றிற்கு தமிழக அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதன்படி நிதி ஓதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மணிமேகலை விருது பெறுவதற்கான தகுதிகள் வருமாறு:- சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் கீழ்கண்ட 6 காரணிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். முறையான கூட்டம் நடத்தல், சேமிப்பு செய்ததை முறையாக பயன்படுத்தல், வங்கிக்கடன் பெற்று இருத்தல், குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைதல், உறுப்பினர்கள் திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சி பெற்றிருத்தல, சமூக நல செயல்பாடுகளில் பங்கேற்றல் ஆகியவை ஆகும்.

மேலும் மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் மதிப்பீட்டு காரணிகள் குறித்த விவரங்களை தொடர்புடைய கூட்டமைப்புகள் அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலகில் பெற்றுக்கொள்ளலாம். விருதுக்கு தகுதியான சமுதாய அமைப்புகள் தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில் ஜூன் 25ம்தேதிக்குள் விண்ணப்பங்களை கொடுக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

The post தமிழக அரசு வழங்கும் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Collector of Ariyalur District ,Government of Tamil Nadu ,Ariyalur ,Collector of Ariyalur ,Ariyalur District Collector ,
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பினை...