வேதாரண்யம்,ஜூன்12: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நெடுஞ்சாலை துறை சார்பாக 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி வேதாரண்யம் தாலுகா பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை சாலைகளின் ஓரங்களில் 2000 மரக்கன்றுகள் நடுவதாக உத்தேசிக்கப்பட்டு நேற்று 200 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் பகுதியில் தஞ்சாவூர் – கோடியக்கரை நெடுஞ்சாலையில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நெஞ்சாலைதுறை கோட்ட பொறியாளர் சுரேஷ் தலைமை தாங்கினார்.
உதவி பொறியாளர் மதன்குமார் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டுறவு வங்கித் தலைவர் உதயம்முருகையன் மரக்கன்றினை நட்டு பணியினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தசாமி, கூட்டுறவு சங்க இயக்குனர் சோழ நம்பிசாலை ஆய்வாளர் கவிதா, நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் உதயகுமார் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிகள் கலந்து கொண்டனர்.
The post கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 2000 மரக்கன்றுகள் நடும் விழா துவக்கம் appeared first on Dinakaran.
