கோபால்பட்டி, ஜூன் 12: சாணார்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை பெய்ததால் மரங்கள் சாய்ந்தன. சாணார்பட்டி ஒன்றியப் பகுதிகளில். அக்னி நச்சத்திரம் முடிந்தும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை சாணார்பட்டி ஒன்றிய பகுதிகளான கோபால்பட்டி, வேம்பார் பட்டி, அய்யாபட்டி, விளக்கு ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 நிமிடம் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் தெருக்களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மேட்டுக்கடையில் சாலை ஓரத்தில் உள்ள கூபா புல் மரம் பலத்த காற்று காரணமாக வேரோடு சாய்ந்தது.
The post சாணார்பட்டி சுற்று வட்டாரப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் வெளுத்து வாங்கிய கனமழை: மரங்கள் சாய்ந்தன appeared first on Dinakaran.