×

கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம்

 

பல்லடம், ஜூன் 12: பல்லடம் ஒன்றியம் கரைப்புதுார் ஊராட்சி குப்பிச்சிபாளையத்தில் கருப்பராயன் கன்னிமார் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கோ பூஜை, விநாயகர் பூஜை மற்றும் மகா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. அதன் பின், முளைப்பாலிகை எடுத்தல், தீர்த்தம் கொண்டு வருதல், முதல் மற்றும் இரண்டாம் கால யாகபூஜை, சுவாமி சிலைகள் கண் திறத்தல் நடந்தன. தீர்த்த கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்கார பூஜையில், கருப்பராய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

The post கருப்பராயன் கோவில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Karupparayan Temple ,Kumbabhishekam ,Palladam ,Kumbabishekam ,Karupparayan Kannimar Temple ,Kuppichipalayam ,Palladam Union Karaipudur Panchayat.… ,Karupparayan ,Temple Kumbabishekam ,
× RELATED திருநங்கையை தாக்கியவர் கைது