×

மழை நீர் வடிகால் கால்வாய் கட்ட பூமி பூஜை

 

பல்லடம், ஜூன் 12: பல்லடம் ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சி உப்பிலிபாளையம் பரமசிவம் கோயில் அருகில் மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன் நிதி ஒதுக்கீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பில் மழை நீர் வடிகால் கால்வாய் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இப்பணியை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கரைப்புதூர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், ஊராட்சி தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் ரவி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், வார்டு உறுப்பினர்கள் ஜோசப், கோவிந்தராஜ், கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், ராஜ்குமார் பரமசிவம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post மழை நீர் வடிகால் கால்வாய் கட்ட பூமி பூஜை appeared first on Dinakaran.

Tags : Bhoomi ,Puja ,Palladam ,Palladam Union Karaiputur Panchayat Uppilipalayam Paramasivam Temple ,District Councilor ,Karaiputur ,Bhoomi Pooja ,Dinakaran ,
× RELATED மத்திகிரி அரசு பள்ளியில் கலையரங்கம் கட்டும் பணி