×

அதிமுகவுக்கான இடங்களை தேர்வு செய்து விட்டு கூட்டணி கட்சிகளின் தகுதிக்கு ஏற்ப தான் சீட் வழங்குவோம்: முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டி

சென்னை: அதிமுகவுக்கான இடங்களை தேர்வு செய்து விட்டு கூட்டணி கட்சிகளின் தகுதிக்கு ஏற்ப தான் சீட் வழங்குவோம் என்று முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான செம்மலை கூறியதாவது: தமிழ்நாட்டை பொறுத்தவரை அது நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி. அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைகின்ற வாய்ப்பு நிச்சயமாக இருக்கும். தமிழகத்தில் அமைக்கப்படுகின்ற கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும். அதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்காது.

எந்த கட்சியோடு, எந்த தேசிய கட்சியோடு, மாநில கட்சியோடு கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து முடிவு எடுப்பார். அது தான் இறுதி முடிவாக இருக்கும். தேர்தலுக்கு முன்பு சாதாரண சிறிய கட்சிகள் கூட அதிக தொகுதிகளில் போட்டியிடலாம் என்ற அவர்களின் விருப்பத்தையோ? எண்ணத்தையோ குறை சொல்ல முடியாது. பாஜவை பொறுத்தவரை தேசிய கட்சி என்ற அடிப்படையில், மத்தியில் ஆட்சி செய்கிறது என்ற அடிப்படையில் அதிகப்படியான தொகுதிகளில் போட்டியிடலாம் என்று விருப்பம் இருக்கும்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய பாஜ தலைவர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் வாய்ப்பு கொடுக்கும் வகையில் அதிக இடங்களை பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஆசை, எண்ணம் இருக்கலாம். எங்களை பொறுத்தவரை நாங்கள் எத்தனை இடங்களில் வெற்றி பெறுவோம் என்று எங்களுக்கு என்று ஒரு இலக்கு இருக்கிறது. அந்த இலக்கின் அடிப்படையில் எங்களுக்கான இடங்களை தேர்வு செய்து, கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் தகுதி, மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய செல்வாக்கு ஏற்ப அது ஒற்றை இலக்கா, இரட்டை இலக்கா ஒரு இடமா, இரண்டு இடமா, கட்சியின் செல்வாக்கை பொறுத்து இருக்கும். அப்படி தான் எங்களுடைய கூட்டணி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுகவுக்கான இடங்களை தேர்வு செய்து விட்டு கூட்டணி கட்சிகளின் தகுதிக்கு ஏற்ப தான் சீட் வழங்குவோம்: முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,Chemmalai ,Chennai ,Former minister ,Semmalai ,Dinakaran ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...