×

மரம் வெட்டியதற்கு அன்புமணி எதிர்ப்பு ஒரு மரத்துக்கு 10 மரக்கன்று நடுகிறோம்: தெற்கு ரயில்வே விளக்கம்

சென்னை: எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக 600 மரங்களை வெட்டி வீழ்த்துவதா என அன்புமணி கேள்வி எழுப்பினார். அதற்கு தெற்கு ரயில்வே ஒரு மரத்துக்கு 10 கன்றுகள் நடுகிறோம் என்று அளித்துள்ளது. பாமக தலைவர் அன்புமணிக்கு தெற்கு ரயில்வே சார்பில் அளிக்கப்பட்ட விளக்கம்: தெற்கு ரயில்வே சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான அமைப்பாகும். ரயில்வே வளாகத்தில் உள்ள அதிக எண்ணிக்கையிலான மரங்கள் அதற்கு சாட்சி. சென்னை எழும்பூர் ரயில் நிலையம் 114 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம் மற்றும் நகரின் மையத்தில் அமைந்துள்ளது.

ரயில் நிலைய மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பாக மொத்தம் 318 மரங்கள் பாதிக்கப்பட்டதாக அடையாளம் காணப்பட்டது. இந்த 318 மரங்களுக்கு மாவட்ட பசுமைக் குழுவின் அனுமதியை ரயில்வே நிர்வாகம் பெற்றது. வெட்டப்படும் மரங்களின் எண்ணிகையை குறைந்தப்பட்சமாக வைத்திருக்க நாங்கள் நேர்மையான முயற்சிகளை எடுத்துள்ளோம். பாதிக்கப்படும் 318 மரங்களில் 103 மரங்கள் ரயில்வே வளாகத்தில் உள்ள வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு ,33 மரங்களின் கிளைகள் சீர்செய்து அதே இடத்தில் தக்கவைக்கப்படும்.

மேலும் 182 மரங்கள் மட்டுமே பாதிக்கப்படும். 2022-23ம் ஆண்டில்1.18 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளும்,ஏப்ரல் மே 23 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 16,743 மரக்கன்றுகளும் தெற்கு ரயில்வேயின் அதிகார வரம்பில் உள்ள பல்வேறு இடங்களில் நடப்பட்டுள்ளன. மேலும் 1:10 என்ற விகிதத்தில் மரக்கன்றுகள் நடப்படும். அதாவது வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 10 மரக்கன்றுகள் நடப்படும்.

The post மரம் வெட்டியதற்கு அன்புமணி எதிர்ப்பு ஒரு மரத்துக்கு 10 மரக்கன்று நடுகிறோம்: தெற்கு ரயில்வே விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Andaramani ,Chennai ,Annpurani ,Ellampur ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...