×

சுப்ரியா சுலே, பிரபுல் படேலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுப்ரியா சுலே, பிரபுல் படேலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேலுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காகத் தாங்கள் இருவரும் மேற்கொண்ட கடின உழைப்பும், தங்களது நாடாளுமன்றச் செயல்பாடுகளும் தங்களை இப்பதவி உயர்வுக்கு மிகவும் தகுதியுடையவராக்குகின்றன. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

The post சுப்ரியா சுலே, பிரபுல் படேலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Supriya Sule ,Prabul Patel ,Chennai ,Nationalist Congress Party ,M.K.Stalin ,Prabul Patel.… ,
× RELATED கனமழை எச்சரிக்கை; திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்