×

சீனாவுக்கு கியூபாவில் உளவு தளம்: அமெரிக்கா உறுதி தகவல்

வாஷிங்டன்: உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்த விரும்பும் சீனா, அமெரிக்க மின்னணு தகவல் தொடர்புகளை உளவு பார்க்க முயன்று வருகிறது. இந்நிலையில், கியூபாவில் உள்ள தீவில் மின்னணு ஒட்டு கேட்கும் நிலையம் அமைக்க சீனா மற்றும் கியூபா ஒப்பந்தம் செய்துள்ளதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. அதில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள கியூபாவுக்கு கடன் கொடுத்து சீனா இந்த ஒப்பந்தத்தை முடித்து கொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதனை கியூபா வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கார்லோஸ் மறுத்துள்ளார். ஆனால், கடந்த 2019ம் ஆண்டு முதல் கியூபாவில் உள்ள தீவில் சீனாவின் உளவு தகவல் சேகரிக்கும் தளம் செயல்பட்டு வருகிறது என்பதை அமெரிக்க உளவுத்துறை உறுதிபடுத்தி உள்ளது.

The post சீனாவுக்கு கியூபாவில் உளவு தளம்: அமெரிக்கா உறுதி தகவல் appeared first on Dinakaran.

Tags : China ,Cuba ,US ,Washington ,
× RELATED தென் சீன கடலுக்கு பயணம்: 3 இந்திய போர் கப்பல்கள் சிங்கப்பூர் சென்றடைந்தன