×

ஒன்றிய அரசு 100% எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்துவது மாநில உரிமையை பறிக்கும் செயல்: பாமக தலைவர் அன்புமணி அறிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து எம்.பி.பி.எஸ் இடங்களுக்கும் ஒன்றிய அரசே நேரடியாக கலந்தாய்வு நடத்த முடிவு செய்திருக்கிறது. மாணவர்களின் நலன் என்ற பெயரில் திணிக்கப்படுகிறது. இந்த புதிய கலந்தாய்வு மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் செயலாகும்.

இந்த முறையை மாற்றி விட்டு, மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வை தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்படும் இளைநிலை மருத்துவக் கல்வி வாரியம் மூலம் இனி நடத்தலாம் என்று மருத்துவ ஆணையம் கூறியுள்ளது. இதை ஏற்க இயலாது. மாணவர் சேர்க்கைகள் மாநில அளவில் நடத்தப்படுவது தான் சிக்கல் இல்லாமல் இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வகையான இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஒற்றைக் கலந்தாய்வு என்ற பெயரில் மாநில அரசுகளின் மீதமுள்ள அதிகாரத்தையும் பறிக்கக்கூடாது. எனவே, 100% மருத்துவ இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

The post ஒன்றிய அரசு 100% எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்துவது மாநில உரிமையை பறிக்கும் செயல்: பாமக தலைவர் அன்புமணி அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Union Govt ,MBPS ,BMC ,Anbumani ,CHENNAI ,BAMA ,President ,Tamil Nadu Government Medical Colleges ,Private Medical Colleges ,Union Government ,Dinakaran ,
× RELATED முதுநிலை நீட்தேர்வு தள்ளிவைப்பு...