×

ஏரியில் இறங்கி விளையாடிய சகோதரிகள் பலி

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த கல் நார்சாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (40). இவரது மனைவி லதா(33). இவர்களது மகள்கள் லட்சிகா(12), ரேஷ்மா(10). பள்ளி விடுமுறை என்பதால் புதூர் பூங்குளத்தில் உள்ள லதாவின் தாய் வீடான, பாட்டி ரஞ்சிதம் வீட்டில் லட்சிகா, ரேஷ்மா ஆகிய இருவரும் தங்கி இருந்தனர். இந்நிலையில் நேற்று காலை ரஞ்சிதம் அவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்காக மோட்டூர் ஏரிக்கு ஓட்டிச்சென்றார். அப்போது லட்சிகா, ரேஷ்மா ஆகியோர் ஏரியில் விளையாடியபோது, நீரில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

The post ஏரியில் இறங்கி விளையாடிய சகோதரிகள் பலி appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Parthiban ,Narsampatti ,Lata ,Lakshika ,
× RELATED திருப்பத்தூர் பள்ளி, கல்லூரி வழக்கம்போல் இயங்கும்