×

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், இந்த கல்வியாண்டில் வேளாண்மை (ஆங்கிலவழி), வேளாண்மை (தமிழ்வழி) தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய டிப்ளமோ படிப்புகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பெற்றோர் கோரிக்கையை ஏற்று, வேளாண்மை (ஆங்கிலவழி), வேளாண்மை (தமிழ்வழி) தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் ஆகிய டிப்ளமோ படிப்புகளுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் வரும் ஜூலை 1-ம் தேதி வரை டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதார்கள் www.tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 0422-6611346, 0422-6611345, 94886-35077, 94864-25076 என்ற எண்களிலும் ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் (email) மூலமாகவும் வார நாட்களில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : University of Agriculture of Tamil Nadu ,Govay ,Tamil Nadu Agricultural University ,Tamil Nadu Agricultural University Administration ,
× RELATED காளான் வளர்க்க பயிற்சி