×

கொரடாச்சேரி அருகே மாணவர் சேர்க்கை மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கல்

 

நீடாமங்கலம், ஜூன் 10: கொரடாச்சேரி அருகே உள்ள அம்மையப்பன் பகுதியில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட முதன்மை கல்வி அலுவலர் மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம் அம்மையப்பன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிழக்கில் நேற்று புதிதாக மாணவர் சேர்க்கை நடந்தது.

சேர்க்கை செய்யப்பட்ட முதல் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி கையேடு மற்றும் ஆசிரியர்களுக்கான கையேட்டினை திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாலசுப்ரமணியன், வட்டார கல்வி அலுவலர்கள் விமலா, சுமதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிருந்தாதேவி, பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post கொரடாச்சேரி அருகே மாணவர் சேர்க்கை மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Koradacherry ,Needamangalam ,Ammaiyappan ,Dinakaran ,
× RELATED கோடை கால பஞ்சத்தை போக்க குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்