×

கோடியக்கரையில் பைபர் படகுகள் ஆய்வு

 

வேதாரண்யம்,ஜூன்10: கோடியக்கரையில் படகு துறைமுகத்தில் மீன்பிடி படகுகள் மீன்வளத்துறையால் ஆய்வு செய்யப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை படகு துறைமுகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இப்படகுகளில் உள்ள வெளிப்பொருத்தும் என்ஜின் அல்லது உள் பொருத்தப்பட்ட எஞ்சின், யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த படகிற்கு வாக்கி டாக்கி மற்றும் டீசல் மானியம் பெறப்படுகிறதா என்பது குறித்தான ஆய்வை தஞ்சாவூர் மீன்வளத்துறை ஆய்வாளர் கெங்கேஸ்வரி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இது போல் ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம் வெள்ளப்பள்ளம், மணியன்தீவு, வாணவன்மகாதேவி உள்ளிட்ட 11 மீவை கிராமங்களிலும் உள்ள சுமார் 1500 பைபர் படகுகளை மின் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

The post கோடியக்கரையில் பைபர் படகுகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kodiakkarai ,Vedaranyam ,Fisheries Department ,Nagapattinam district ,Kodiakarai… ,Kodiakarai ,Dinakaran ,
× RELATED கூடலூரில் உள்ள மீன்கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்..!!