×

கீழ்வேளூர் யாதவ நாராயண பெருமாள் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்

 

கீழ்வேளூர்,ஜூன்10: கீழ்வேளூர் யாதவ வல்லித் தாயார் உடனுறை யாதவ நாராயண பெருமாள் கோயிலில் பெருமாள் திருக்கல்யாணம் நேற்று முந்தினம் இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் யாதவ வல்லித் தாயார் உடனுறை யாதவ நாராயணப்பெருமாள் கோயிலில் யாதவ நாராயண பெருமாள்-யாதவ வல்லித்தாயார் திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று முந்தினம் காலை கடஸ்தாபனம், கலச பூஜை நடைபெற்றது.

மதியம் யாதவ நாராயண பெருமாள், யாதவவல்லி தயார் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை அட்சயலிங்க சுவாமி கோயில் இருந்து ஏராளமான பெண்கள் சீர்வரிசை ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கன்னிகா தானம், திருமாங்கல்ய தாரணம், திருவாதாரனம் நடைபெற்றது.

பின்னர் ஊஞ்சலில் சிறப்பு மலர் அலங்காரத்தில் யாதவ நாராயணப்பெருமாள்-யாதவ வல்லித்தாயார் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்று சிறப்பு தீபாராதணை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர். ஓம் நமோ நாராயணா டிரஸ், கிராமவாசிகள் செய்திருந்தனர்.

The post கீழ்வேளூர் யாதவ நாராயண பெருமாள் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Kilivelur Yadava ,Perumal ,Kilivellur ,Perumal Thirukalyanam ,Yadava ,Vallit ,Udanurai ,Narayana Perumal ,Temple ,Kilivellur Yadava ,of ,
× RELATED அருள் மழை பொழியும் அரங்கநாதப் பெருமாள்