×

அரவக்குறிச்சி- இடையகோட்டை மினி பஸ் இயக்க வேண்டும்

 

அரவக்குறிச்சி. ஜூன்10: கரூர் மாவட்டத்திலேயே கரூர் போக்குவரத்துக் கிளை சார்பாக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காந்திகிராமத்தில் இருந்து கரூர் பேருந்து நிலையம் வரை மினி பஸ் இயக்கப்படுகிறது.ஆனால் அரவக்குறிச்சி அரசு போக்குவரத்து கிளை சார்பாக ஒரு மினி பஸ் கூட இயக்கப்படுவதில்லை. அரவக்குறிச்சியிலிருந்து இடையகோட்டை வரை மொண்டியூத்தாங்கரை, தண்ணீர் பந்தல், குமாரபாளையம் வெங்கடாபுரம், பாறையூர் வழியாக சிற்றுந்து இயக்கப்பட வேண்டும்.

இப்பகுதி கிராமங்கள் போக்குவரத்து வசதியின்றி உள்ளது. இப் பகுதியிலிருந்து கட்டிட தொழிலாளர்கள் ,பெயிண்ட் அடிப்போர், கூலித் தொழிலாளர்கள் மேலும் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, இடையகோட்டைக்கு மருத்துவமனைக்கு வரும் பெரியவர்கள் என பலரும் 3 கி.மீ தூரம் நடந்து மெயின் ரோடு வந்து பேருந்து ஏற வேண்டிய சிரமமான சூழ்நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பயணம் செய்ய மிகுந்த சிரமப்படுகின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு வருவதிலும் சிரமம் உள்ளது.

எனவே இந்நிலையைப் போக்கிட மேற்கண்ட தடம் வழியாக அரவக்குறிச்சி உள்ள அரசு போக்குவரத்து கிளை மூலமாக இடையகோட்டை வரை பொதுமக்கள் நலன் கருதி மினி பஸ் இயக்க வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கலைஞரால்தான் மினி பஸ் சேவை தொடங்கப்பட்டது கலைஞர் நூற்றாண்டில் பேருந்து இல்லாத பகுதிக்கு மினிபஸ் இயக்குவதன் மூலம் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.

The post அரவக்குறிச்சி- இடையகோட்டை மினி பஸ் இயக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Aravakurichi ,Udayakottai ,Karur Transport Branch ,Karur District ,Gandhigram ,Karur Medical College Hospital ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...