×

திருப்புவனத்தில் சூரியனை சுற்றி ஒளி வட்டம் பொதுமக்கள் கண்டு வியப்பு

 

திருப்புவனம், ஜூன் 10: திருப்புவனத்தில் நேற்று நண்பகலில் சூரியனை சுற்றி கருப்பு நிறத்தில் வட்ட வடிவ வானவில் தோன்றியது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை வெயில் கடுமையாக பொதுமக்களை வாட்டி வருகிறது.

பகலில் பொதுமக்கள் யாரும் வெளியில் நடமாட முடியாமல் தவித்து வருகின்றனர். தெருவோர வியாபாரிகள், கூலி தொழிலாளிகள் என பலரும் வெயிலின் தாக்கத்தால் தவித்து வரும் நிலையில் நேற்று மதியம் திருப்புவனத்தில் சூரியனை சுற்றிலும் ஒளி வட்டம் நீண்ட நேரம் நீடித்தது.

பகல் வானவில் போன்ற இந்த ஒளிவட்டத்தை பலரும் கண்டு ரசித்தனர். அகல்வட்டம் என அழைக்கப்படும் இந்த ஒளிவட்டம் காணப்பட்டால் உடனே மழை பெய்யும் என்பது நம்பிக்கை, திருப்புவனத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சூரியனை சுற்றி ஒளிவட்டம் தோன்றியதால் மழை வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

The post திருப்புவனத்தில் சூரியனை சுற்றி ஒளி வட்டம் பொதுமக்கள் கண்டு வியப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupuvana ,Tiruppuvanam ,
× RELATED திருப்புவனம் பாமக பிரமுகர் கொலை...