×

வராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு

 

ராமநாதபுரம், ஜூன் 10: வைகாசி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை சுயம்பு மகா வராஹிஅம்மன் கோயிலில் நூற்றுக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர். தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சுயம்பு மஹா வராஹி அம்மனுக்கு மஞ்சள், பால், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல வகை அபிஷேகம் நடந்தது. மஞ்சள், வெற்றிலை, வேப்பிலையை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பிறகு மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் நிர்வாகம் சார்பில் உலக நன்மைக்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நேர்த்திக்கடனுக்காக நூற்றுக்கணக்கான எலுமிச்சை, தேங்காய், வெண்பூசணி மற்றும் அரிசி மாவில் விளக்கேற்றி வழிபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி சிவகங்கை, விருதுநகர், மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு வெளிமாவட்டங்களிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

The post வராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Teipirai ,Varahi Amman temple ,Ramanathapuram ,Theipirai ,Panchami ,Thiruuttarakosamangai Swayambu ,Maha Varahi Amman temple ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் உப்பு உற்பத்திக்கு தயாராகும் உப்பளங்கள்