×

ரூ.5,551 கோடி பெமா விதிமீறல் ஜியோமி நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

புதுடெல்லி: சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி, அதன் தலைமை நிதி அதிகாரியும் இயக்குநருமான சமீர் ராவ், முன்னாள் நிர்வாக இயக்குனர் மனு ஜெயின் ஆகியோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி இந்தியாவில் அதன் வங்கி கணக்குகளில் இருந்த ரூ. 5,551 கோடியை பெமா விதிகளை மீறி சட்டவிரோதமாக பணப்பறிமாற்றம் செய்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பெமா விதி எண் 37ஏ அடிப்படையில் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி விசாரணை நடத்தி அன்னியசெலாவணி சட்டத்தை மீறி ஜியோமி நிறுவனம் செயல்பட்டு இருப்பதையும், ரூ.5551.27 கோடி இந்தியாவுக்கு வெளியே அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதையும் உறுதி செய்தார். இதையடுத்து ஜியோமி டெக்னாலஜி இந்தியா பிரைவேட் நிறுவனம், அதன் தலைமை நிதி அதிகாரி சமீர் ராவ், முன்னாள் நிர்வாக இயக்குனர் மனு ஜெயின், சிஐடிஐ வங்கி, எச்எஸ்பிசி வங்கி, டூயுட்சவ் வங்கி ஏஜி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

The post ரூ.5,551 கோடி பெமா விதிமீறல் ஜியோமி நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Department of Enforcement ,New Delhi ,Jiaomi ,Samir Rao ,BEMA ,Geomi ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு