×

பாட புத்தகத்தில் மாற்றம் தலைமை ஆலோசகர்களாக இருக்க வெட்கப்படுகிறோம்: என்சிஇஆர்டிக்கு கடிதம்

புதுடெல்லி: மகாத்மா காந்தி, ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை உள்ளிட்ட பாடங்களை நீக்கிய அரசியல் அறிவியல் பாட புத்தகத்தின் தலைமை ஆலோசகர்களாக தங்கள் பெயரை குறிப்பிடுவதற்கு வெட்கப்படுகிறோம் என என்சிஇஆர்டிக்கு எழுதப்பட்ட கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) பாட புத்தகத்தில் இருந்து மகாத்மா காந்தியின் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கான முயற்சி இந்து தீவிரவாதிகளை எவ்வாறு தூண்டியது, ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை, முகலாய மன்னர்கள் வரலாறு குறித்த சில பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 9 முதல் 12ம் வகுப்புகளுக்கான அரசியல் அறிவியல் புத்தகங்களுக்கு தலைமை ஆலோசகர்களாக இருந்த சுஹாஸ் பால்ஷிகர், யோகேந்திர யாதவ் ஆகியோர் என்சிஇஆர்டிக்கு எழுதிய கடிதத்தில், ‘இந்த சிதைக்கப்பட்ட பாடப்புத்தகங்களுக்கு எங்களை தலைமை ஆலோசகர்களாக குறிப்பிடுவதில் வெட்கப்படுகிறோம். இந்த மாற்றங்கள் குறித்து எங்களிடம் ஒருபோதும் ஆலோசிக்கப்படவில்லை. எங்களுக்கு தெரிவிக்கப்படவும் இல்லை. எனவே தலைமை ஆலோசர்களாக எங்கள் பெயரை குறிப்பிடுவதை நீக்க வேண்டும்’ என கூறி உள்ளனர்.

The post பாட புத்தகத்தில் மாற்றம் தலைமை ஆலோசகர்களாக இருக்க வெட்கப்படுகிறோம்: என்சிஇஆர்டிக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : NCERT ,New Delhi ,Mahatma Gandhi ,RSS ,Dinakaran ,
× RELATED ஆண்டுதோறும் ஆய்வு செய்து...