×

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தின் நுபாடா மாவட்டத்தில் உள்ள காரியர் சாலை ரயில் நிலையத்தில் துர்க் – புரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அப்போது அதன் ஏசி பெட்டியில் இருந்து புகை வந்தது. இதை உணர்ந்த பயணிகள் இது குறித்து உடனடியாக ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சிறிது நேரத்தில் தீயை அணைத்தனர். அதன் பின்னர், ஒரு மணி நேரத்துக்கு பிறகு இரவு 11 மணியளவில் ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த தீ விபத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ appeared first on Dinakaran.

Tags : Odisha ,Bhubaneswar ,Puri Express ,Kariyar Road ,station ,Nupada district ,Dinakaran ,
× RELATED ஒடிசா மாநிலம் பாலசோரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம்