- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- டெய்லர்
- மேட்டுப்பாளையம்
- புதுச்சேரி
- ராம்குமார்
- ஏரிப்பாளையம், உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்
- ஜெயக்குமார்
- திருப்பூர்
புதுச்சேரி, ஜூன் 10: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, ஏரிபாளையத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் (26). இவரும், திருப்பூரைச் சேர்ந்த நண்பர் ஜெயக்குமாரும் சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி, குருமாம்பேட்டில் உள்ள தனியார் பை தயாரிக்கும் கம்பெனியில் தையல் வேலைக்கு சேர்ந்தனர். கடந்த 4ம்தேதி இருவரும் மேட்டுப்பாளையத்தில் உள்ள சாராயக் கடையில் மதுஅருந்தியபோது அவர்களுடன் பணியாற்றிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருணைநாதன் (29) என்பவருடன் ராம்குமாருக்கு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் சமாதானத்துக்கு பின் தனியார் கம்பெனிக்கு திரும்பிய இருவரும் அங்குள்ள அறையில் தங்கியிருந்தனர். அப்போது ராம்குமாரை, கருணைநாதன் இரும்பு தடியால் சரமாரி தாக்கிவிட்டு தலைமறைவானார். இதில் படுகாயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் காப்பாற்றி ஜிப்மருக்கு அனுப்பிய நிலையில் அங்கு ராம்குமார் இறந்தார்.
இதுதொடர்பாக ஜெயக்குமார் அளித்த புகாரின்பேரில் கருணைநாதன் மீது கொலை வழக்குபதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார் 2 தனிப்படை அமைத்து குற்றவாளியை வலைவீசி தேடினர். 2 நாட்களாக தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை நேற்று தமிழக பகுதியில் சுற்றிவளைத்தது. பின்னர் அவரை மேட்டுப்பாளையம் காவல் நிலையம் அழைத்து வந்து அதிரடியாக விசாரித்தனர். அப்போது சாராயக்கடையில் ராம்குமாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவும், வயதில் சிறியவரான ராம்குமார் பொது இடத்தில் அசிங்கப்படுத்தியதால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டதாகவும், இதன் எதிரொலியாக தனிமையில் படுத்திருந்த அவரை ஆளில்லாத நேரம் பார்த்து இரும்புத் தடியால் சரமாரி அடித்து போட்டுவிட்டு தலைமறைவானதாகவும் ராம்குமார் வாக்குமூலத்தின்போது கூறியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. பின்னர் கொலைக்கு பயன்படுத்திய இரும்பு தடியை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மேட்டுப்பாளையத்தில் டெய்லரை அடித்துக் கொன்ற தமிழக வாலிபர் அதிரடி கைது appeared first on Dinakaran.