×

ஆவின் பால் திருட்டு விவகாரம் 6 செயல் அலுவலர்கள் அதிரடி மாற்றம்

வேலூர்: வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் மையத்தில் இருந்து பல மாதங்களாக ஒரே பதிவெண்ணில் 2 வேன்களில் தினமும் சுமார் 2,500 லிட்டர் வீதம் பல லட்சம் லிட்டர் பால் நூதன முறையில் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 வேன்களுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டு, ஒப்பந்த ரத்து செய்யப்பட்டது. தனியார் பாதுகாப்பு ஏஜென்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில், ஆவின் விநியோக பிரிவிலிருந்து 6 செயல் அலுவலர்கள் பால் வினியோகம் அல்லாத மற்ற பிரிவு அலுவலகங்களுக்கு பணியிட மாற்றம் செய்து ஆவின் நிர்வாகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆவின் நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக விற்பனை, மார்க்கட்டிங், விநியோகம் உள்ளிட்ட 8 துறை தலைவர்களுக்கும் ஆவின் நிர்வாகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசுக்கு வரும் 14ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ஆவின் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

The post ஆவின் பால் திருட்டு விவகாரம் 6 செயல் அலுவலர்கள் அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Awin Ball ,Vellore ,Vellore Satuvachhari ,Awin Paul ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...