×

பைக் டாக்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

கோவை: ‘தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதியில்லை’ என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் மற்றும் செந்தில் பாலாஜி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் 2 ஆண்டுகளுக்கான எந்த பலன்களையும் வழங்கவில்லை. அவர்கள் வழங்காமல் விட்டு சென்ற பணப்பலன்களை திமுக அரசு பொறுப்பேற்றதும் அதற்கு என நிதி ஒதுக்கி, தற்போது பணப்பலன்கள் வழங்கி உள்ளன. போக்குவரத்து ஊழியர்கள் போராடாமலேயே இந்த நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் சீர்குலைக்கப்பட்ட சம்பள விகிதங்களை, திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பழையபடி, கலைஞர் வழங்கியபடி இப்போது 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கி வருகிறோம்.

கடந்த 5 ஆண்டுகளில் புதிய ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணிக்கு எடுக்கப்படவில்லை. தற்போது, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் பணி நியமனம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து, பிற பணிமனைகளிலும் பணி நியமனம் நடைபெறும். பைக் டாக்சி என்பது தனிநபர் பயன்படுத்தும் வாகனம். அதனை வாடகைக்கு விடும் வாகனமாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. தமிழக அரசை பொருத்தவரை பைக் டாக்சியை பயன்படுத்தக்கூடாது. பைக் டாக்சியை வாடகைக்கு விடுவதற்கு இதுவரை எந்தவிதியும் நிர்ணயிக்கப்படவில்லை. தமிழகத்தில் பைக்டாக்சிக்கு அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post பைக் டாக்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Shivankar ,Govay ,Tamil Nadu ,Transport Minister ,Sivasankar ,
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...