×

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 10 கோடியாக அதிகரிப்பு: தமிழ்நாடு சற்று குறைவு; புதுச்சேரி அதிகம்

புதுடெல்லி: சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை இந்தாண்டு 10 கோடியாக அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டி சற்று பாதிப்பு குறைந்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2019ல் 70 மில்லியனாக (7 கோடி) இருந்த நிலையில் தற்போது 100 மில்லியனாக (10 கோடி) அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

கோவாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 26.4 சதவீதமும், புதுச்சேரியில் 26.3 சதவீதமும், கேரளாவில் 25.5 சதவீதமும் அதிகரித்துள்ளது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சர்க்கரை நோயின் பாதிப்பு குறைவாக இருந்தாலும், மெதுவாக அதிகரித்து வருகிறது. கோவா, கேரளா, தமிழ்நாடு, அரியானா போன்ற மாநிலங்களில் முந்தையை பாதிப்புடன் ஒப்பிடும் போது, சற்று குறைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 மில்லியனாக இருந்தது, ஆனால் தற்போது 10 மில்லியனாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 10 கோடியாக அதிகரிப்பு: தமிழ்நாடு சற்று குறைவு; புதுச்சேரி அதிகம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,New Delhi ,India ,ICMR ,
× RELATED அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்