- ஆத்தூர்-சித்தியங்கோட்டை
- நிலக்கோட்டை
- சுற்றி ஆத்தூர்
- சித்தியன்கோட்டை
- நரசிங்கபுரம்
- Sedapatti
- சொக்கலிங்கபுரம்
- பொடிக்காமன்வாடி
- சித்தரேவு
- அய்யம்பாளையம்
- ஆத்தூர்-சித்தியங்கோட்டை சாலை
- கோப்பை
*தீயும் வைப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படுது
நிலக்கோட்டை : ஆத்தூரை சுற்றி சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம், சேடபட்டி, சொக்கலிங்கபுரம், போடிகாமன்வாடி, சித்தரேவு, அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவர்கள் ஆத்தூருக்கு வந்து செல்லும் பிரதான சாலையாக சித்தையன்கோட்டை சாலை உள்ளது. இந்த சாலையோரம் கடந்த சில மாதங்களாக குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். இந்த சாலை வழியாக ஆத்தூருக்கு மட்டுமின்றி ஆத்தூர் தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த சாலையோரத்தில் கொட்டி கிடக்கும் குப்பை கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பதால் உண்டாகும் புகைமூட்டம் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே ஆத்தூர் யூனியன் நிர்வாகம் சாலையோரத்தில் குப்பை கழிவுகளை கொட்டி தீ வைப்பதை தடுத்து அதற்கென அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று மேலாண்மை முறையில் கழிவுகளை கையாள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஆத்தூர்- சித்தையன்கோட்டை சாலையில் குப்பை கழிவுகளால் ‘கப்’ appeared first on Dinakaran.