×

செரிபரல் பால்சி… குழந்தைப்பருவ மூளைப்பாதிப்பு!

நன்றி குங்குமம் டாக்டர்

மூளைப் பாதிப்பில் பலவகை உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று குழந்தைப் பருவத்தில் உருவாகும் செரிபரல் பால்சி எனப்படும் மூளைப் பாதிப்பு. இதுபற்றி விரிவாகப் பார்ப்போம்.

குழந்தைப்பருவ மூளைப்பாதிப்பு (Cerebral Palsy)

இது பிறப்பின் போது அல்லது பிறந்து முதல் 2 வருடங்களுள் ஏற்படுகின்ற நிலையான மூளை பாதிப்பினால் ஏற்படும் உடல் தொழிற்பாட்டு இயலாமையும் வளப்படிநிலைக் குறைவுகளையும் கருதுகின்றது. இதன்போது பிறப்பின் போது அல்லது அதற்கு மிகவும் அண்மித்த காலங்களில் ஏற்பட்ட மூளையின் கட்டமைப்புப் பாதிப்பினால் குழந்தையின் வளர்ச்சி செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. இந்த மூளைப்பாதிப்புகள் கர்ப்பகாலத்தின்போது 75% மாணவர்களில் ஏற்படுகின்றன. பிரசவத்தின் போது 5% இனரிலும் பிறப்பின் பின்னர் 15% பாதிப்பும் ஏற்படுகின்றன.

இதன் போது அசைவு மற்றும் உடலின் நிலையில் நிரந்தரமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன் உடற்தொழில் பாதிப்புகளுடன் உணர்ச்சிப் பாதிப்பு, அறிவுத்திறன் குறைவு, தொடர்பாடல் ஆற்றல் குறைவு, நடத்தை மாற்றங்கள், வலிப்பு, மற்றும் வன்கூட்டுத் தொகுதியில் பாதிப்புகள் ஆகியன ஏற்படுகின்றன.இந்த மூளைப்பாதிப்பிற்கு பூரண சுகமளிக்கும் வழிமுறை எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. சிகிச்சையானது இம் மூளைப்பாதிப்பானது குழந்தையின் வளர்ச்சிப் படிநிலைகளில் ஏற்படுத்தும் பின்னடைவுகளை தடுப்பதற்கு அல்லது அவற்றின் பாதிப்பைக் குறைப்பதற்கே பயன்படுத்தப்படும்.

இந்த மூளைப்பாதிப்பும் அதனால் ஏற்படும் உடலின் செயற்பாட்டுக் குறைவும் பல்வேறு வகைப்படும். இவற்றுள் செயலிழந்த உடற்பாகங்கள் இறுக்கமாக காணப்படும் வகையே மிகவும் பொதுவானதாகும். இது 70-80% நோயாளிகளில் காணப்படும். அத்துடன் இது ஏனைய வகை நோயாளிகளிலும் சிறிதளவு காணப்படும். இந்தப் பாதிப்பிற்குள்ளான சிறுவர்களில் அங்கங்கள் இறுக்கமாகக் காணப்படுவதுடன் இவர்களில் பெரும்பாலும் மூளையின் முன்மூளைப் பகுதியின் தொடர்புகள் பாதிக்கப்படுவதனாலேயே இந்நிலையானது ஏற்படுகிறது.இவற்றுடன் உடற்சமநிலைக் குறைவால் ஏற்படும் பாதிப்புகள், உடல் அங்கங்கள் சுயக் கட்டுப்பாடின்றி அசைதல் போன்றனவும் ஏனைய வகைகளாகும்.

சத்திர சிகிச்சை முறைகள்

வேறு வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறுபட்ட சத்திரசிகிச்சை முறைகள் கையாளப்படுகின்றன. அவையாவன

*இடுப்பு மூட்டு தளர்வு மற்றும் முள்ளந்தண்டு வளைவுகளைப் பரிகரித்தல்
*தசை இணையங்களை நீட்டல் அல்லது மாற்றம் செய்தல்
*அவயக்குட்டைத் தன்மையை சரிசெய்ய என்புகளை வெட்டுதல்
*பின்பக்க முள்ளந்தண்டு நரம்புகளைத்தெரிவு செய்து வெட்டுதல்
*ஏனைய சிகிச்சை முறைகள்
*அசைவு உதவிகள்
*நிலைப்படுத்தும் உதவிகள்
*சக்கர நாற்காலி
*தன்னியக்க அசையும் கருவிகள்
*பொட்டுலினம் நச்சுப்பொருள் – இது 3-6 மாதங்களுக்கு தசையிறுக்கத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படுகின்றது.
*பீனோல் ஊசிகள் – பெரிய தசைகளில் பயன்படுத்தப்படுகின்றது.
*தசையிறுக்கத்தை குறைப்பதற்காக பெளதிக முறைகளான வெப்பமாக்கல், குளிராக்கல் மற்றும் அதிர்வு முறைகள் பயன்படுத்தப்படும்
*மூட்டுக்களைத்தாங்கும் கருவிகள் மூலம் அசைவு வரையறையைக்கூட்டுதல்.

ஏனைய விடயங்கள்

*உளவியல் மற்றும் உளவியல் சுகாதாரம் கருத்திற் கொள்ளப்படவேண்டும்.
*சமூக மற்றும் கல்வியியல் இடைத்தொடர்பு சமூகவியல் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு வாழ்க்கைக் காலத்தையும் கூட்டுகின்றது.
*நோயினால் ஏற்படும் சிக்கல்கள்
*தசையில் ஏற்படும் சுருக்கங்கள்
*உணவுக்கால்வாய்த்தொகுதி அறிகுறிகள்
*உணவு களத்தினுள் மீளுதல்
*உணவு சுவாசப்பாதைக்குள் செல்லல்
*போகணைக்குறைபாடுகள்
*சுவாசத்தொகுதிச் சிக்கல்கள்
*நியூமோனியா
*சுவாசக்குழாய், நுரையீரல் வளர்ச்சிக்குறைபாடு
*பல் நோய்கள்
*மனவளர்ச்சி குன்றல்
*கேள்திறன் குறைபாடு.

நோயின் பண்பு

இந்நோயின் முதலாவது இரண்டாவது வகைகளுக்குள் அடங்கும் நோயாளிகள் சாதாரண வாழ்க்கைக்காலத்தை கொண்டிருப்பதோடு தீவிர பாதிப்புடையவர்கள் மேலே கூறப்பட்டவர்களின் 40வீதமான வாழ்க்கைக்காலத்தை கொண்டிருப்பார்கள்.நான்கு அவயவங்களும் பாதிக்கப்பட்டவர்கள், காக்கை வலிப்பு நோய் உடையவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் மருத்துவச் சிக்கல்கள் உடையவர்கள் மந்தமான போக்கையே காட்டுகிறார்கள்.

நோய்த்தடுப்பு

இந்நோயைத் தடுப்பதற்கு பிரதானமாக பிரசவத்துக்கு முன்பதாகவும் மற்றும் பிரசவகாலங்களிலும் தாய்மாருக்கு ஏற்படும் சிக்கல்களான அயடின் குறைபாடு, றீசஸ் காரணியால் குருதிக்கல அழிவு மற்றும் நரம்படி மஞ்சளடைதல்(Kernicterus) ஆகியவற்றைத் தகுந்த முறையில் பரிகரிப்பதோடு பிறப்புக்காயங்களையும் தடுத்தல் இந்நோயின் இருக்கையைக் குறைக்கும் நோய்ப் பரிசோதனைகள்

நரம்பியல் படப்பிடிப்புக் கற்கைகள்

கழியொலி அலைப்பரிசோதனை – இது குறைமாதக் குழந்தைகளில் இந்நோயின் தாக்கத்தை அறியப் பயன்படுத்தப்படுகின்றது.காந்தப்பரிவுப் படப்பிடிப்பு(MRI) – இது மூளையின் வெண்சடப்பொருளில் ஏற்படும் மாற்றங்களை அறிவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.சி. டி ஸ்கேன் – இது பிறப்புக் கட்டமைப்புக் குறைபாடுகள் மற்றும் குருதிக்கலன் குறைபாடுகள் என்பவற்றால் ஏற்படும் குருதி வெளியேற்றம் என்பவற்றை அறிய உதவுகின்றது ஏனைய பரிசோதனைகள்

*தூண்டப்பட்ட அழுத்தம்
*மின்மூளைய வரைபு (EEG)
*உடனிணைந்த நோய் நிலைமைகள்
*கருப்பை உள்ளகத்தொற்றுக்கள்
*ஜேர்மன் சின்னமுத்து (றுபெல்லா)
*எயிட்ஸ்

*மற்றும் ஏனைய வைரசுக்கள்
*பிறவித்தோற்றக்குறைபாடுகள்
*உதடு மற்றும் அண்ணப்பிளவுகள்
*நச்சு மற்றும் மூளைப்பாதிப்புக்கருவிகள்
*அல்ககோல்
*சிகரெட்
*கொக்கெய்ன்

*தாய்க்கு ஏற்படும் நோய்கள்
*தைரொயிட் நோய்கள்
*வயிற்றில் காயம்
*மண்டையோட்டு உள்ளான குருதிப்பெருக்கு
*குருதியில் உயர் பிலிறுபின் அளவு
*குருதியில் ஒட்சிசன் பற்றாக்குறை

*வலிப்பு நிலைமைகள்
*நோய்ப்பரிகாரம்
*இந்நோய்க்கான பரிகாரமானது பல்துறைசார் மருத்துவர்களுடனும் குறிக்கோளை நோக்கியதாகவும் மேற்கொள்ளப்படவேண்டும். அவையாவன
*இயன்மருத்துவர்
*தொழிற்துறை சிகிச்சை நிபுணர்
*பேச்சு சிகிச்சை நிபுணர்

*பொழுதுபோக்கு பயிற்சி நிபுணர்
*மருந்தியல் சிகிச்சை முறைகள்
*பக்குளோபென் – இது தசையிறுக்கத்தை தளர்த்த உபயோகிக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் வாய்மூலமாக வழங்கப்படினும் சிலவேளைகளில் மூளைய முண்ணாண் பாய்பொருளுக்குள் ஊசி மூலம் செலுத்தப்படுகின்றது.
*டன்றோலின் – டக்குளோபினிலும் பார்க்க சிறந்த இம்மருந்து தசையிறுக்கம் அதிகமாக உள்ள நோயாளிகளில் பயன்படுத்தப்படுகின்றது.

தொகுப்பு : லயா

The post செரிபரல் பால்சி… குழந்தைப்பருவ மூளைப்பாதிப்பு! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dr. ,Dinakaran ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!