×

நாகூர் பகுதியில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

நாகப்பட்டினம்: நாகூரில் நகராட்சி அலுவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் நாகூரில் உள்ள கடைகளில் 3 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. நாகூர் பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தவதாக நகராட்சி ஆணையர் விஜய்கார்த்திக் தகவல் வந்தது. இதையடுத்து நாகூர் பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி அலுவலர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் நாகூர் பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தினர். இதில் 3 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.53 ஆயிரம் 900 அபராதம் விதிக்கப்பட்டது. கைப்பற்றிய பிளாஸ்டிக் பொருட்கள் நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்பட்டது.

The post நாகூர் பகுதியில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Nagor ,Nagapatnam ,Dinakaran ,
× RELATED நாகையில் 110 சவரன் நகைகள் கொள்ளை..!!