×

ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி

பெரியகுளம், ஜூன் 9: பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி வேளாளர் தெருவை சேர்ந்தவர் செந்தில் வீரன் (60). இவர் பெரியகுளத்தில் இருந்து தனது சொந்த ஊரான வடுகபட்டிக்கு பாலா என்பவருக்கு சொந்தமான ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரியகுளம் அருகே உள்ள பங்களாப்பட்டி பிரிவு என்னும் இடத்தில் வேகத்தடையில் வேகமாக சென்று கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது.

இதில் செந்தில் வீரன் தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து வந்த தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த செந்தில்வீரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Senthil Veeran ,Vadugapatti Velalar Street ,
× RELATED வெள்ளப்பெருக்கு காரணமாக பெரியகுளம்...