×

மானாமதுரை அருகே பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கானோர் தரிசனம்

 

மானாமதுரை, ஜூன் 9: மானாமதுரை அருகே வேலூர் வேலாங்குளத்தில் உள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மானாமதுரை அருகே வேலாங்குளத்தில் லெட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கோயில் அருகே யாகசாலை மேடை அமைத்து அதில் புனித நீர் கலசங்கள் வைத்து யாக பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் காலை ஆறாம்கால யாகபூஜை நிறைவடைந்து பூர்ணாஹூதி முடிந்ததும் கடம் புறப்பாடு நடைபெற்றது.

ஆச்சாரியார்கள் புனித நீர் கடங்களை சுமந்து கோயிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் மூலவர் விமான கலசத்தின் மீது ஆச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தி வைத்தனர். அப்போது கோயிலில் எழுந்தருளியுள்ள கருடாழ்வார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் குடமுழுக்கை கண்டு தரிசித்தனர்.

விமான கலசத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டதும் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதன் பின் மூலவர் லட்சுமி நாராயண பெருமாளுக்கு அபிஷேகம் நடத்தி மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மதியம் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

The post மானாமதுரை அருகே பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா: ஆயிரக்கணக்கானோர் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Perumal ,Temple ,Kumbabhishek ,Manamadurai ,Lakshmi Narayana Perumal Temple ,Vellore Velangulam ,Perumal Temple ,Kumbabhishekam ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி