பாட்னா: ஒடிசா ரயில் விபத்தில் 19 பீகார் பயணிகள் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் 50 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் ஜூன் 2ம் தேதி 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 288 பேர் பலியானார்கள். இந்த நிலையில் சென்னை வந்த கோரமண்டல் ரயிலில் பீகார் பயணிகள் அதிகம் பேர் பயணம் செய்தனர். அவர்களில் இப்போது வரை 19 பேர் மாயமாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 பேர் பலியாகி விட்டனர். 43 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பீகாரில் 12 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.
பள்ளி செல்ல குழந்தைகள் மறுப்பு
ஒடிசா பாலசோர் விபத்தில் பலியானவர்களின் சடலங்கள் அங்குள்ள பள்ளிகளில் வைக்கப்பட்டு இருந்தன. அவை தற்காலிக சவக்கிடங்காக பயன்படுத்தப்பட்டன. தற்போது அனைத்து சடலங்களும் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன. அங்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் பஹாநகா உயர்நிலைப்பள்ளிக்கு செல்ல மாணவர்கள் மறுத்து வருகிறார்கள். அவர்கள் பீதியில் இருப்பதாக தலைமை ஆசிரியை பிரமிளா சிவான் தெரிவித்தார்.
The post ஒடிசா ரயில் விபத்து; 19 பீகார் பயணிகள் மாயம்: 50 பேர் பலியானது உறுதி appeared first on Dinakaran.