சென்னை: திமுக விவசாய அணியின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்களை நியமனம் செய்து மாநிலச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக விவசாய அணி மாநில செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, மாவட்ட செயலாளர்கள் ஒப்புதலோடு திமுக விவசாய அணியின் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அதன்படி காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தலைவர்-ரா.விஜயகுமார், துணை தலைவர்-செ.அரசு, அமைப்பாளர்-சோழனூர் மா.ஏழுமலை, துணை அமைப்பாளர்கள்-ரா.ராமமூர்த்தி, நா.ரவி, என்.எஸ்.நந்தகுமார், ஆ.சதீஷ் (எ) சரவணன், து.அல்லிமுத்து.
திருவள்ளூர் மத்திய மாவட்ட தலைவர்-க.தர், துணைத் தலைவர்-ஆர்.சங்கரலிங்கம், அமைப்பாளர்-த.குமரேசன், துணை அமைப்பாளர்கள்-ஆர்.ராஜேஷ், க.பலராமன், செ.நித்யானந்தம், எம்.சுகுமார், ல.சரத்பாபு.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர்-எஸ்.கே.பூபாலன், துணை தலைவர்-எஸ்.உதயகுமார், அமைப்பாளர்-எ.கே.சம்பத்குமார், துணை அமைப்பாளர்கள்-பி.சிவய்யா, கே.பிரகாஷ், வி.வி.சேகர், பி.சிவராமன், எம்.தேவராஜ். இதேபோல திருப்பத்தூர், விழுப்புரம் தெற்கு, தூத்துக்குடி தெற்கு, தூத்துக்குடி வடக்கு, மதுரை தெற்கு, சேலம் கிழக்கு, திருச்சி தெற்கு, திருச்சி கிழக்கு, திருச்சி வடக்கு, அரியலூர், கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, தஞ்சை வடக்கு மாவட்டங்களில் திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
The post திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர்கள் நியமனம்: மாநில செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் அறிவிப்பு appeared first on Dinakaran.