×

லாரியில் புகுந்த சாரை பாம்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், லாரியில் புகுந்த சாரை பாம்பை தீயணைப்பு வீரர்கள் லவகமாக மீட்டனர். செங்கல்பட்டு அருகே பெரியநத்தம், கெங்கையம்மன் கோயில் தெருவின் சாலையோரத்தில் அதே பகுதியை சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமான ஒரு லாரி பழுதாகி, நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை அந்த லாரிக்குள் 8 அடி நீளமுள்ள சாரை பாம்பு சுற்றி வருவதை அப்பகுதியினர் பார்த்தனர். பின்னர், பாம்பை பிடிக்க முயற்சித்தபோது, அது லாரி எஞ்ஜினுக்குள் புகுந்து கொண்டது.

இது குறித்து செங்கல்பட்டு தீயணைப்பு படையினருக்கு செந்தில் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி, லாரி எஞ்ஜின் பகுதியில் சுருண்டு கிடந்த 8 அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர், அந்த பாம்பை ஒரு பெட்டியில் வைத்து, அருகில் உள்ள காப்பு காட்டுப் பகுதியில் பத்திரமாக விட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

The post லாரியில் புகுந்த சாரை பாம்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Periyanatham ,Kengaiyamman ,Sarai ,
× RELATED பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த...