×

பல ஆண்டுகள் நிலுவையில் இருந்த வழக்குகளை முடித்த மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்கள் உட்பட 120 அதிகாரிகளை நேரில் அழைத்து பாராட்டு: கமிஷனர் சங்கர் ஜிவால் வெகுமதி வழங்கினார்

சென்னை: பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்குகளை விரைந்து முடித்த மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்கள் உட்பட 120 காவல் அதிகாரிகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். சென்னை மாநகர காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் காவல் அதிகாரிகள் உட்பட காவலர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு உரிய பாராட்டு மற்றும் சான்றிதழ்களை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கி வருகிறார். இதனால் காவல்துறையில் பணியாற்றும் போலீசார் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவுப்படி துணை கமிஷனர் நாகஜோதி மேற்பார்வையில் கூடுதல் கமிஷனர் பிரபாகரன் தலைமையில் உதவி கமிஷனர் சரஸ்வதி, இன்ஸ்பெக்டர்கள் ராஜேஸ்கண்ணா, தியாகராஜூ, புஷ்பராஜ் மற்றும் எஸ்ஐக்கள் ஆகியோர் சீட்டு மோசடி, கந்து வட்டி, போலி பாஸ்போர்ட் புலனாய்வு பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான போலி பாஸ்போர்ட் தொடர்பான 236 வழக்குகளை தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்குகளை விரைவாக முடித்து கைது செய்யப்பட்ட இந்தியா மற்றும் வெளிநாட்டை சேர்ந்த குற்றவாளிகள் அவர்களது சொந்த ஊர் மற்றும் சொந்த நாடுகள் செல்ல175 வழக்குகளின் முன் அனுமதி ஆணைகள் பெற்றனர்.

மேலும், போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலை பிடித்து போலி பாஸ்போர்ட்டுகள், ஆவணங்கள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. எனவே, மத்திய குற்றப்பிரிவு-1ல் சிறப்பாக பணியாற்றிய துணை கமிஷனர் நாகஜோதி முதல் 37 காவலர்களை நேற்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து பாராட்டு சான்று மற்றும் வெகுமதி வழங்கினார். அதேபோல், மத்திய குற்றப்பிரிவு -2ல் துணை கமிஷனர் மீனா மேற்பார்வையில் கூடுதல் கமிஷனர் அசோகன், நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவு-1 உதவி கமிஷனர் ஜான் விக்டர் நேரடி பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ஆப்ரகாம் க்ரூஸ் துரைராஜ், எஸ்ஐ மற்றும் காவலர்கள், மற்றும் நம்பிக்கை மோசடி பிரிவு -2 உதவி கமிஷனர் ராஜசேகரன், இன்ஸ்பெக்டர் பிரசீதா தீபா, எஸ்ஐக்கள், காவலர்கள், நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவு-3 உதவி கமிஷனர் ரித்து, மோசடி புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர் சச்சிதானந்தம் தலைமையிலான குழுவினர் என மொத்தம் மத்திய குற்றப்பிரிவு-2ல் உள்ள துணை கமிஷனர் உட்பட 26 காவல் அதிகாரிகளை பாராட்டி கமிஷனர் சங்கர் ஜிவால் வெகுமதி, சான்றிதழ் வழங்கினார்.

மேலும், மத்திய குற்றப்பிரிவு -3ல் துணை கமிஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில் கூடுதல் துணை கமிஷனர் அகஸ்டின் பால் சுதாகர், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் அனந்தராமன், இன்ஸ்பெக்டர்கள் தனலட்சுமி, மேரி ராணி, பொன்சித்ரா என 16 காவல் அதிகாரிகள் மற்றும் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் கூடுதல் கமிஷனர் ஷாஜிதா தலைமையிலான இன்ஸ்பெக்டர் வினோத்குமார் உள்ளிட்ட காவலர்கள் மற்றும் ரவுடிகளுக்கு எதிரான குழுவின் உதவி கமிஷனர் மனோஜ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் பூமாறன், எஸ்ஐக்கள் தலைமையிலான குழுவினர் கடந்த 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி ஜாகீர் உசேன் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது ெசய்தனர்.

அதேபோல், விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பிரபு, சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான 16 காவல் குழுவினர் என மொத்தம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றும் 3 துணை கமிஷனர்கள், 4 கூடுதல் கமிஷனர்கள், 8 உதவி கமிஷனர்கள், 12 இன்ஸ்பெக்டர்கள், 27 எஸ்ஐக்கள், 8 சிறப்பு எஸ்ஐக்கள், 58 காவலர்கள் என மொத்தம் 120 காவல் அதிகாரிகளை நேரில் அழைத்து கமிஷனர் நேற்று பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

The post பல ஆண்டுகள் நிலுவையில் இருந்த வழக்குகளை முடித்த மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்கள் உட்பட 120 அதிகாரிகளை நேரில் அழைத்து பாராட்டு: கமிஷனர் சங்கர் ஜிவால் வெகுமதி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Commissioner ,Shankar Jiwal ,Chennai ,Federal Crime ,Crime ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்...